பதிவு செய்த நாள்
01
அக்
2026
02:10
சாம்ராஜ் நகர்: ‘‘மலை மஹாதேஸ்வராவின் வரலாறும், கலாசாரமும் ஒரு பெரும் சொத்து. அக்காலத்தில் அனைத்து ஏழை மக்களுக்கும் நம்பிக்கையையும், ஆன்மிக வழிகாட்டுதல்களையும் வழங்கியது,’’ என, முதல்வர் சிவகுமார் கூறினார்.
சிவகுமார் முதல்வரான பின், முதன் முறையாக நேற்று சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு சென்றார். ஹனுார் தாலுகாவில் உள்ள ஹெலிபேடில் அவர் அளித்த பேட்டி:
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது, மிகவும் பின்தங்கிய பகுதி என்ற உணர்வு நிலவுகிறது. மலை மஹாதேஸ்வராவின் வரலாறும், கலாசாரமும் ஒரு பெரும் சொத்து.
அக்காலத்தில் அனைத்து ஏழை மக்களுக்கும் நம்பிக்கையையும், ஆன்மிக வழிகாட்டுதல்களையும் வழங்கியது. இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள், காவிரி ஆற்றை கடந்து, பக்தியுடன் இம்மாவட்டத்திற்கு வருகின்றனர். நானும் எங்கள் கிராமத்தில் இருந்து என் தந்தையை, பிலிகிரிரங்கன மலையில் உள்ள கோபாலசுவாமி கோவிலுக்கும், சிக்கலுாரில் உள்ள சித்தப்பாஜி கோவிலுக்கும் அழைத்து செல்வது வழக்கம்.
ஒவ்வோர் ஆண்டும் பொங்கலுக்கு பின், அங்கு எங்கள் குடும்பத்தினர் வழிபடுவர். அங்கு ஒரு சமுதாய கூடம் கட்டும் திட்டமும் உள்ளது. பாரத் ஜோடோ யாத்திரை, காங்., மூத்த தலைவர் ராகுலுடையது. இந்த பெயர் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக, செயல்பட்டு வருகிறோம். கட்சி அமைப்புக்காக மாநில தலைவர் ஹரிபிரசாத் இந்நிகழ்ச்சியை திட்டமிட்டு உள்ளார்.