Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விமானி சுமித் மச்சார் முழு ... மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்.,11ல் துவக்கம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளைஞர்கள் சக்தியே இந்தியாவின் வரம்: :காஞ்சி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இளைஞர்கள் சக்தியே இந்தியாவின் வரம்: :காஞ்சி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை

பதிவு செய்த நாள்

01 அக்
2026
05:10

மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு.  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மதுரைக்கு வருகை தந்தார். மதுரையில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளித்த பேட்டி:


ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும்,அனைவருடைய நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கை என்பது இறைவனுடைய அருளால் நமக்கு கிடைத்திருக்கிறது. இதை நாம் சரியாக உபயோகப்படுத்திக்கொண்டு, அர்த்தமுள்ளவிதத்திலே செயல்பட்டு,நாம் சாதிக்க வேண்டிய சாதனைகள் நிறைய இருக்கிறது. சந்தித்து கொண்டிருக்கிற சவால்களும் நிறைய இருக்கின்றன. ஆகவே இளைஞர்கள் அவர்களுடைய உடல் உழைப்பாக இருக்கட்டும், கல்வியாக இருக்கட்டும்.நல்ல உணவு, நல்ல உணர்வு, நல்ல உடை இது போன்ற அனைத்துவிதத்திலும் அவர்கள் நல்லவிதமாக நாம் யோசித்து, நாம் செய்ய வேண்டியது, முதியோர்களை பார்த்துக்கொள்வது, இந்தியா என்பது வளர்ந்து வரக்கூடிய நாடாக இருக்கிறது. 


மேலும் வளர்ந்துவருவதற்காகன தேவையும், வளர்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆகவே இளைஞர்கள், 35 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆகவே அந்த இளைஞர்களுடைய எண்ணிக்கை உடைய சக்தியானது,நாட்டை வளமாக்குவதிலே பெரும் பங்கு வகிக்கிறது. ஆகவே நல்ல சிந்தனையோடு நம்முடைய நாடு இதுவரை முன்னேறி இருக்கிறது என்றால் கடினமான உழைப்பும், எளிமையான வாழ்க்கையும், முதியோர்களை மதித்தலும், முன்னோர்கள் செய்த நன்மைகளை நாம் பின்பற்றி நல்லதை, தண்ணீர்பந்தலாக இருக்கட்டு, அன்னதானமாக இருக்கட்டும், நலம் தருவதற்காக மரங்களை நாம் நடுவதாக இருக்கட்டும், பராமரிப்பதாக இருக்கட்டும், ஆகவே அனைத்து உயிரினங்களையும் அன்புடன் பழகி, அன்பே சிவம் என்கிற தத்துவத்தை நாம் பின்பற்றி வருகிறோம். ஆகவே இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவுக்கு ஒரு வரமாக இருக்கிறது. அதை நல்லமுறையிலே நீங்கள் பின்பற்றி, சிறப்பாக உழைத்து, சிக்கனமாக வாழ்ந்து, சேவையை செய்து, சிக்கனம், சே மிப்பு, சேவை என்கிற விதத்திலே நல்ல பழக்கவழக்கங்களுடன் நீங்கள் வாழ்ந்து அனைவருக்கும் உதவிகரமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar