கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி பெருந் திருவிழா வெகு விமரிசை யாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான புரட்டாசி திருவிழா கடந்த செப்., 12ல், கொடியேற்றத்துடன் தொடங் கியது. விழா நாட்களில் நாள் தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய் யப்பட்டு, பல்வேறு வாகனங் களில் உற்சவர் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ் வான கடந்த 21ல், திருக் கல்யாண உற்சவம், 24ல், தேரோட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத் தனர். நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு, தீபாராதனை காட்டப் பட்டது. பின்னர் வெள்ளி அனுமன் வாகனத்தில், கல் யாண வெங்கடரமண சுவாமி எழுந்தருளி திருவீதி வந்தார். உலா பக்தர்கள் கோவிந்தா திரளான கோவிந்தா, என்ற பக்தி முழக்கங்க ளுடன் சுவாமி தரிசனம் செய் தனர். தொடர்ந்து வரும், 4ல் முத்துப்பல்லாக்கு உற்சவம், 5ல் ஆளும் பல்லாக்கு உற் சவம், 6ல் வண்ண பூக்களால் வேள்வி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.