வெங்கனூர் கம்பபெருமாள் கோவிலில் கோவிலில் தேர் திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2026 03:10
ராமநத்தம்: புரட்டாசி சனிக்கிழமையொட்டி, ஶ்ரீ கம்ப பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிப்பட்டால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, இன்று புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, ராமநத்தம் அடுத்த வெங்கனூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கம்ப பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை திருமஞ்சன அபிஷேகம் செய்து, அலங்கார பூஜைகள் நடந்தது. பின், பகல் 11:00 மணியளவில் பெருமாள் தேரில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.