வள்ளலார் தெய்வ நிலையம் முற்றுகை வடலுாரில் திடீர் பரபரப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2026 11:10
வடலுார்: வடலுார் வள்ளலார் தெய்வ நிலையத்தை நேற்று இரவு பார்வதிபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், வடலுாரில் அமைந்துள்ள சத்திய ஞான சபை மற்றும் தருமச்சாலை உள்ளிட்டவற்றை தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில், வள்ளலார் தெய்வ நிலையம் நிர்வகித்து வருகிறது.இந்நிலையில் சத்திய ஞான சபையில் இருந்த பழைய கொடி மரம் அகற்றப்பட்டது.பார்வதிபுரம் கிராம மக்கள் நிதி திரட்டி புதிய கொடிமரம் அமைத்தனர். நாளை வள்ளலார் பிறந்த நாள் விழாவையொட்டி, புதிய கொடி மரத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு, விழா நடைபெற உள்ளது.
இந்த புதிய கொடி மரத்தை உபயதாரராக தனி நபரை, வள்ளலார் தெய்வ நிலையம் அறிவித்தது. அதனை அறிந்து ஆவேசமடைந்த பார்வதிபுரம் கிராம மக்கள் நேற்று இரவு வள்ளலார் தெய்வ நிலையத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகிகள் மற்றும் வடலுார் போலீசார், புதிய கொடிமர அனுமதியில் தனி நபர் பெயர் உபயதாரராக இடம் பெறாது என உறுதி அளித்தனர். அதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.