கோவை பெருமாள் கோயில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு; பக்தர்கள் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2026 11:10
கோவை; புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி மகாலட்சுமி தாயார் உடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
புரட்டாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ரோடு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள ஆதிசேஷன் மகாவிஷ்ணு சுவாமிக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.