Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்து கோயில்களில் அக்.11 ல் ... சூரக்குண்டில் பாரம்பரிய பொங்கல் விழா; சுவாமி சிலை எடுத்து, கிடாவெட்டி நேர்திக்கடன் சூரக்குண்டில் பாரம்பரிய பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம்

பதிவு செய்த நாள்

06 அக்
2026
01:10

கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.பின்னர் கால சந்தி பூஜை முடிந்து விஷ்வக்ஷேனர் பூஜை புண்ணியாவசனம் கலச ஆவாகனம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் உற்சவமூர்த்திகளுக்கு  ஸ்தபன ‌திருமஞ்சனம்.  நெய் தேன், பால் ,தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது . பின்னர் ரங்கநாதர் சிவப்பு பட்டு உடுத்தி  வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேள தாளம் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்து ஆஸ்தானம் சேர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்மாசனத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து உச்சகால பூஜை சாற்றுமறை மகாதீப ஆராதனை நடந்தது. வைபவத்தில் ஸ்தலத்தார்கள்  வேதவியாச பட்டர் , திருமலை நல்லாான் சக்கரவர்த்தி, அர்ச்சகர்கள், மிராசு தாரர்கள்  திருக்கோவில் செயல் அலுவலர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar