அருணாசலேஸ்வரர் கோயில் அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2026 05:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையாருக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையின் புதிய கட்டுப்பாடுகளின்படி, முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அபிஷேகத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக பக்தர்கள் இந்த பரிசோதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறை குறுகலாக இருப்பதால், பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அபிஷேகம் காணும் பக்தர்களுக்குத் தேவையான ஓஆர் எஸ் கரைசல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.