சனாதன தர்மத்தை வலியுறுத்தி 4000 கி.மீ., நடைபயணமாக ராமேஸ்வரம் வந்த துறவிகள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2026 06:10
ராமநாதபுரம்: சனாதன தர்மத்தை வலியுறுத்தி ஹரித்வார் ராமானந்த் ஆசிரமத்தில் இருந்து 20 துறவிகள் அடங்கிய குழுவினர் 4000 கி.மீ., நடை பயணமாக இன்று ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் சென்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து 20 துறவிகள் அடங்கிய குழுவினர் 2025ல் புறப்பட்டு 16 மாதங்களாக நடைபயணம் செல்கின்றனர். இன்று காலையில் ‘ஹர ஹர மஹாதேவா ’என்று முழக்கமிட்டவாறு ராமநாதபுரம் வந்தனர். இதுகுறித்து குழுத்தலைவர் துளசிதாஸ் கூறியதாவது: ஹரித்வாரில் உள்ள ராமானந்த் சுவாமிகள் ஆசிரமத்தில் இருந்து சனாதன தர்மத்தை வலியுறுத்தி, ஆன்மிகப் பயணமாக உலகப் புகழ் பெற்ற 12 ஜோதிர்லிங்க தலங்களுக்கு செல்வது நோக்கம். 2025 ஜூன் 27 ல் துவங்கி தற்போது 4000 கி.மீ., பாதயாத்திரையாக ராமேஸ்வரம் செல்கிறோம். இன்று ராமேஸ்வரத்தில் தரிசனத்தை முடித்து விட்டு கன்னியாகுமரி, திருவனந்தபுரம் கோயில்களுக்கு செல்கிறோம். கோயில்களில் தரிசனம் செய்து கூட்டு வழிபாடு மூலம் சனாதன தர்மத்தை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மீண்டும் ஹரித்வாருக்கு நடந்தே செல்லும் வகையில் 3 ஆண்டுகளாக பயணத் திட்டம் வகுத்துள்ளோம் என்றனர்.