விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவிலில், குரு வார பிரதோஷத்தை முன்னிட்டு, இன்று மாலை 3:00 மணிக்கு மூலவர் ஸ்ரீ பசுபதிஸ்வரர், ஸ்ரீ நந்திகேஸ்வரருக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் பசுபதீஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, ஸ்ரீ நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பசுபதீஸ்வரர், நந்திகேஸ்வரருக்கு அர்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.