Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் ... திருப்பணியில் விடுபட்ட மேற்கு ராஜகோபுரம்: காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் அவலம் திருப்பணியில் விடுபட்ட மேற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை ராமகிருஷ்ண மடம் புதுச்சேரி கிளை நாளை திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை ராமகிருஷ்ண மடம் புதுச்சேரி கிளை நாளை திறப்பு

பதிவு செய்த நாள்

09 அக்
2026
10:10

புதுச்சேரி: கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில், சென்னை ராமகிருஷ்ண மடத்தின், புதுச்சேரி கிளை திறப்பு விழா நாளை 10ம் தேதி நடக்கிறது.


இதையொட்டி, இன்று மதியம் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி வேத பாடசாலையின் ஆனந்த நாராயண சாஸ்திரிகள் மற்றும் அவரது குழுவினர் மூலம் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், நவக்கிரக பூஜை நடந்தது. அதில், கவர்னர் கைலாஷ்நாதன், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜிடம் ஆசி பெற்றனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக நாளை 10ம் தேதி காலை 7:00 மணிக்கு திருமூவரைப் பிரதிஷ்டை செய்தல், 9:30 மணிக்கு சிறப்பு பூஜை, 10:30 மணிக்கு ஹோமம், 11:30 மணிக்கு ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் ஆசியுரை நடக்கிறது. மதியம் 2:00 மணி முதல் கோயம்புத்துார், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் ஹரிவிரதானந்தர், சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி ஆத்மகனானந்தர், பேலுார் மடம் ராமகிருஷ்ண மிஷன் சாரதா பீடத்தின் செயலாளர் சுகதேவானந்தர், விழுப்புரம் ராமகிருஷ்ண மிஷன் செயலாளர் பரமசுகானந்தர் ஆகியோரின் சொற்பொழிவு நடக்கிறது. மாலை நடக்கும் விழாவில், முதல்வர் ரங்கசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று ராமகிருஷ்ண மடம், புதுச்சேரி கிளையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar