Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை ராமகிருஷ்ண மடம் புதுச்சேரி ... இன்று மகாளய அமாவாசை, முன்னோரை வணங்கி வழியனுப்புவோம்.. வளமுடன் வாழ்வோம்! இன்று மகாளய அமாவாசை, முன்னோரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பணியில் விடுபட்ட மேற்கு ராஜகோபுரம்: காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் அவலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பணியில் விடுபட்ட மேற்கு ராஜகோபுரம்: காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் அவலம்

பதிவு செய்த நாள்

09 அக்
2026
10:10

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 29 கோடி ரூபாய் செலவில் 38 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்துள்ள மேற்கு ராஜகோபுரம் மட்டும் சீரமைக்கப்படாமல் உள்ளதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் 23 ஏக்கர் பரப்பளவில், ஐந்து பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. பல்லவர், சோழர், விஜயநகர மன்னர்கள் இக்கோவிலில் திருப்பணி செய்து ஏகாம்பரநாதரை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில், 29 கோடி ரூபாய் செலவில் தெற்கு ராஜகோபுரம், பல்லவ கோபுரம், சிவகங்கை தீர்த்தம், கம்பா நதி தீர்த்தம், 1,000 கால் மண்டபம் மேல்தளம் பழுது பார்த்தல், கோவிலுக்குள் மழைநீர் தேங்காமல் வடிகால்வாய் அமைத்தல் என 38 திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்தாண்டு டிச., 8ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. பல்லவர்கள் ஆட்சி காலத்தில், 6ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட- மேற்கு ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த நிலையில் உள்ளது. ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 10 மாதங்களுக்கு மேலாகியும் மேற்கு ராஜ கோபுரம் திருப்பணி மட்டும் நடைபெறாமல் உள்ளது.எனவே, மேற்கு ராஜேகோபுரத்தை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மேற்கு ராஜகோபுரத்தின் கருங்கல் தளத்திற்கு மேல் உள்ள கோபுர பகுதி முழுதும் சிதிலமடைந்து உள்ளதாக, தொல்லியல் வல்லுநர் குழு மூலம் கருத்துரு பெற்றுள்ளோம். சேதமடைந்த பகுதி மட்டும் அகற்றிவிட்டு, புதிதாக கட்டுவதற்கு அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் திருப்பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar