Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹாளய அமாவாசை, திருப்புவனம் வறண்ட ... புரட்டாசி சனி; கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம், விஸ்வரூப பூஜை புரட்டாசி சனி; கதிர் நரசிங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய அமாவாசை; சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்.. ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகாளய அமாவாசை; சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்.. ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு

பதிவு செய்த நாள்

10 அக்
2026
04:10

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் பிரசித்தி பெற்ற புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கடலில் புனித நீராடினர். இன்று அதிகாலை 3:30 முதல் மதியம் 3:00 மணி வரை தொடர்ந்து கடலில் புனித நீராடினர். முன்னோர்களை நினைத்து திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை புரோகிதர்கள் மூலம் செய்தனர்.  சேதுக்கரை அருகே உள்ள வெள்ளை பிள்ளையார் மற்றும் அகத்தியர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். சிதறு தேங்காய் உடைத்தனர். பசுக்களுக்கு பச்சரிசி, வெல்லம், அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை வழங்கினர். மதிய உணவிற்கு முன்னதாக காகங்களுக்கு அன்னமிட்டனர். இதுபோன்று திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, சுண்டல் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் காலை முதல் பாலாபிஷேகம் நடந்தது. அருகே உள்ள கடலில் பக்தர்கள் புனித நீராடி சங்கல்ப பூஜைகளை செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar