திருப்போரூர் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2026 12:10
திருப்போரூர்: திருப்போரூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று நவராத்திரி விழா கொண்டாட்டம் தொடங்கியது.
திருப்போரூர் அருகே தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஞானசக்தியாக சரஸ்வதி தேவியும், இச்சா சக்தியாக லட்சுமி தேவியும், கிரியா சக்தியாக தாய் மூகாம்பிகையும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பது தனிச் சிறப்பாகும். நவராத்திரி விழாவையொட்டி வரும் 20ம் தேதி வரை 10 நாட்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, கோவில் வளாகத்தில் விநாயகர், கிருஷ்ணர், வள்ளி தெய்வானையுடன் முருகர், சிவன், பெருமாள், ஐயப்பன், சரஸ்வதி உள்ளிட்ட சுவாமிகளின் கொலு பொம்மைகளை வைத்து பக்தர்கள் நேற்று அம்மனை தரிசித்தனர். அதேபோல், செம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்குகிறது. மேலும், பக்தர்கள் தங்கள் வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து நவரத்தி விழாவை கொண்டாடி வருகின்றனர்.