ஆயிமாபுதூர், சித்தி விநாயகர் கோவிலில், நவராத்திரி கொலு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2026 01:10
அன்னூர்: ஆயிமாபுதூர், சித்தி விநாயகர் கோவிலில், நவராத்திரி கொலு பூஜை நடந்தது.
ஆயிமாபுதூரில், பழமையான, ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் ஏழாவது ஆண்டு நவராத்திரி விழா துவங்கியது. இரவு கொலு பூஜை நடந்தது. இதையடுத்து, சித்தி விநாயகருக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வருகிற, 19ம் தேதி வரை, தினமும் இரவு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.