பதிவு செய்த நாள்
11
பிப்
2013
11:02
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது.ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் அமாவாசையன்று இரவு 7.00 மணிக்கு மாமாங்கம் ஆற்றில் கொடி கம்பம் வைத்து பூஜை செய்யப்பட்டது.பின்பு கிணத்துக்கடவு திரு.வி.க., மற்றும் விவேகானந்தர் வீதி வழியாக பொள்ளாச்சி-கோவை மெயின் ரோடு வந்து, பின்பு மாரியம்மன் கோயில் சென்று இரவு 11.00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் மாரியம்மனை வழிப்பட்டனர். இதனையடுத்து 15 நாள் நோன்பு சாட்டப்பட்டுள்ளது.இதில் வரும் 23ம் தேதி இரவு 7.30 மணிக்கு சக்விந்தையை மாமாங்கம் ஆற்றில் இருந்து அழைத்து வருதல், உடன் அம்மன் பூப்பல்லக்கில் திருவீதி உலாவும், 24ம் தேதி காலை 7.00 மணிக்கு மாவிளக்கு அழைத்து வருதலும், காலை 11.00 மணிக்கு குண்டம் திறத்தலும் நடக்கிறது. மாலை 7.00 மணிக்கு குண்டத்தில் பூ போடுதல், மாமாங்கம் ஆற்றிருந்து பூவோடு அழைத்து வருதல் நடைபெறும். வரும் 25ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு குண்டம் இறங்குவதற்கு பூச்செண்டு, கரகம் அழைத்து வர ஆற்றுக்கு செல்லுதல், அம்மன் பூப்பல்லக்கில் உடன் செல்லுதல், காலை 6.30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 26ம் தேதி காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மஞ்சள் நீராடுதல், இரவு 8.30 மணிக்கு மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் இடம் பெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சாமிநாதன் சகோதரர், சுகுமாரன், சுந்தரேசன் சகோதரர் ஆகியோர் செய்து வருகின்றனர்.