பதிவு செய்த நாள்
11
பிப்
2013
11:02
புதுச்சேரி : சுதானா நகர் தேவி கருமாரி அம்மன் கோவில், 21வது ஆண்டு திருவிழாவில், அக்னிச் சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். நைனார்மண்டபம் சுதானா நகர் ஸ்ரீதேவி கருமாரியம்ம்ன கோவில் 21வது ஆண்டு திருவிழா கடந்த 8ம் தேதி காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 8.45 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. பகல் 12 மணிக்கு பால் சாகை வார்த்தலும், 3 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் (9ம் தேதி) காலை 8.30 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு, பக்தர்கள் காப்பு கட்டி, அக்னிசட்டி ஏந்தி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பகல் 12.30 மணிக்கு, சமபந்தி விருந்தும், மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு 108 இளநீர் அபிஷேகமும் நடந்தது. சபாநாயகர் சபாபதி, தி.மு.க., மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், பாஸ்கர் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி, தமிழ்மணி, அறக்கட்டளை தலைவர் வனஜா தமிழ்மணி செய்திருந்தனர்.