இன்று ஐப்பசி கிருத்திகை விரதம்,: கந்தனைக் கரம் குவித்து வணங்குவோர்க்கு காலபயம் இல்லை!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2026 10:10
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை ஐப்பசி கிருத்திகை வருவது மிகவும் சிறப்பு மிக்கத்தாக கருதப்படுகிறது. இன்று கார்த்திகை விரதம் இருந்து பால் அபிஷேகம் செய்து முருகனை வழிபடுவோர் மேலான பதவிகளை அடைவர்.
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. கார்த்திகை நாளில் முருகனை வழிபடுவதுமிக சிறப்பானதாகும். செவ்வாய் கார்த்திகையான இன்று குமரனை வழிபட குறைகள் யாவும் நீங்கும். முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது. நாரத மகரிஷி 12ஆண்டுகள் இந்த விரதமிருந்து, எல்லா முனிவர்களிலும் மேலாக எல்லா உலகமும் சுற்றி வரும் வரம் பெற்றார். இவ்விரதநாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டிக்கவசம், சண்முககவசம் படிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், கேசரி, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுதல் சிறப்பு. கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணம் கேட்பதும் நல்லது. இன்று கந்தனைக் கரம் குவித்து வணங்குவோர்க்கு கலியின் கொடுமையும், காலபயமும் இல்லை! அரோகரா சொல்லி வழிபடுவோம் ஆறுமுகன் அருள்பெறுவோம்!