அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் விமரிசை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2026 10:10
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம், நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. அச்சிறுபாக்கத்தில் தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில், புகழ்பெற்ற இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி, அன்னாபிஷேக வழிபாடு நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. 500 கிலோ அரிசி சாதம் மற்றும் காய்கறி, பழவகைகளால் அலங்கரிக்கப்பட்டு, மஹா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.