திருப்பூர்: கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று திருப்பூரில் நடந்தது.
யுனிவர்சல் ரோட்டில் உள்ள ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் உள்ள திருவருள் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுவரை 2,750-க்கும் அதிகமான திருவாசகம் முற்றோதல் நிகழ்த்திய திருநெல்வேலியைச் சேர்ந்த முத்தையாபிள்ளை தலைமையிலான குழுவினர் திருவாசகம் முற்றோதல் நிகழ்த்தினர். இதில் திருப்பூரைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் அறக்கட்டளையினர் பங்கேற்று மனமுருகி பாராயணம் செய்தனர்.