திருக்கோவிலூர் பாலமுருகன் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2026 10:11
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 61 அடி உயர பாலமுருகன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் 61 அடி உயரமுள்ள பாலமுருகன் சிலையுடன் கூடிய கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினசரி மண்டல பூஜை விழா நடந்து வந்தது. இன்று மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு காலையில் மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில் 61 அடி உயரமுள்ள முருகருக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மகாதீபாராதனையும், தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.