Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் பாலமுருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனாதன தர்மம் என்றுமே அழியதாது; அது எப்போதும் நம்மை காக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சனாதன தர்மம்  என்றுமே அழியதாது; அது எப்போதும் நம்மை காக்கும்

பதிவு செய்த நாள்

01 நவ
2026
10:11

அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா ஸ்வாமி திருமடத்தில் சென்னை வேதபாரதி குருகுலம் டிரஸ்ட், திருப்பூர் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம மண்டலி மற்றும் அவிநாசி குருக்ருபா சேரிடபிள் டிரஸ்ட் ஆகியோர் இணைந்து கோடிகாயத்ரி ஜப ஹோமம் நடத்தினர்.


அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் முன்னிலை வகித்தார். 13 ஹோம குண்டங்களில் 104 ஜப யக்ஞ உறுப்பினர்கள் இணைந்து, உலக நன்மை நலம் பெற வேண்டியும், போர் அபாயங்கள் விலகிட வேண்டியும், மழை வளம் வேண்டியும் கோடி காயத்ரி ஜப ஹோமத்தை நடத்தினர்.


நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை ஆன்மிக சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜெகந்நாதன் பேசியதாவது: சனாதனம் என்றுமே அழியதாது. அது எப்போதும் நம்முடன் இருக்கும். யாராலும் அழித்து விட முடியாது. நம்மை தொடர்ந்து காக்கும். கர்மா என்றால், தினசரி சடங்குகள் என்பது சாதாரணமாக நினைத்துக் கொள்கிறார்கள். அமாவாசை அன்று செய்யப்படும் தர்ப்பணம் கூட நித்ய கர்மா என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியல்ல, நைமித்திக கர்மாவை முறையாக கடைபிடிக்க வேண்டும். காமமும்,கோபமும் எப்போதும் தவிர்க்க வேண்டும். சிந்தனை என்ற தமிழ்ச் சொல்லுக்கு இரண்டு பொருள் உள்ளது. ஒன்று கவலை, மற்றொன்று சிந்திப்பது. நாம் உண்ணும் உணவில் ஒரு சாதப் பருக்கை கூட வீணடிக்க கூடாது. எத்தனையோ மனிதர்கள் ஒருவேளை உணவு கூட இல்லாமல் இவ்வுலகில் இறக்கிறார்கள். அவிநாசி என்றாலே நாம் இப்பிறவியில் செய்த பாவங்களை போக்கிவிடும் ஸ்தலம். மிகவும் ஜாக்கிரதையாக இக்காலகட்டத்தில் பெண் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 61 அடி உயர பாலமுருகன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
சென்னை: நாகப்பட்டினத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வில், 12ம் நுாற்றாண்டைச் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar