Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

திருமங்கையாழ்வார் திருமங்கையாழ்வார் பூதத்தாழ்வார் பூதத்தாழ்வார்
முதல் பக்கம் » 12 ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார்
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 பிப்
2011
14:49

தமிழ்க் குமரியின் நெற்றித் திலகம் போல் தொண்டை நாடு திகழ்கிறது. அவளுடைய புன்சிரிப்பு போல் நாடு அங்கு இயற்கை நெடுகிலும் புத்திளமையின் பொலிவு படர்ந்திருக்கும். அத்தொண்டை நாட்டில் தொன்று தொட்டு பழம்பெரும் நகராகக் காஞ்சிபுரம் விளங்கி வருகிறது. இது கச்சி என்றும் திரு அத்தியூர் (சின்னக்காஞ்சிபுரம்) என்றும் வழங்கப்படுகிறது. ஒரு காலத்தில் சோழ நாட்டின் தலைநகராகவும் பிறகு பல்லவ நாட்டின் தலைநகராகவும் காஞ்சிபுரம் விளங்கியது. இக்காஞ்சிபுரம் இயற்கை எழில் மிகுந்த ஒரு நகரம்.

இத்தகு சிறப்பு வாய்ந்த காஞ்சி நகரில் பல வைணவ தலங்களும், பல சிவ தலங்களும் உண்டு. அவ்வைணவ தலங்களுள் திருவெஃகா என்பதும் யதோத்காரி சன்னிதி என்பதும் ஒன்றாகும். அங்கு திருமாலின் பெருங்கருணை நிறைந்திருக்கும். பக்தர்களின் பக்திப்பாடல்கள் எக்காலத்தும் ஒலித்துக் கொண்டிருக்கும். அங்கு சொன்ன வண்ணம் செய்தான் (யதோத்காரி) சன்னிதியின் அருகே தேவர்களும் வானுலகக் கன்னியர்களும் நீராடுவதும், வீடு பேற்றை அளிக்கும் சிறப்புடையதும், பரந்தாமனின் கருணை நெஞ்சைப்போன்று மிகக் குளிர்ச்சி பொருந்தியதுமான ஒரு பொய்கை. அப்பொய்கையிலேள நறுமணத்தை அள்ளிவீசும் அழகான செந்தாமரை, வெண்டாமரை, கருங்குவளை, நீரோற்பலம், அல்லி முதலான பூக்களெல்லாம் பூத்துக்குலுங்கும் வண்டினங்களிலே உயர்வான கரும்புகள் அம்மலர்களிலே சுரக்கும் இனிய தேறயுண்டு மயங்கி, காலைப்போதும் மாலைப்போதும் முடியும் பொழுதில் மலர்கள் கூம்ப அதனுள் அகப்பட்டுத் தத்தளிக்கும்.

அன்னங்கள் கூட்டம் கூட்டமாக மலர்களினூடே அமைந்து நீங்கி விளையாடும். இவ்வாறான சிறப்பு பொருந்திய பொய்கையில் மலர்ந்திருக்கும் பொற்றாமரை மலர் ஒன்றிலிருந்து இனிய வாசம் கமழும் துளசிச் செடி போல், அன்பே குணமாகக் கொண்டு அறிவொளி வீசும் ஞானச்சுடராக பக்தியின் முழுப்பொருளாக ஒரு மைந்தர் சித்தார்த்தி வருஷம் ஐப்பசி மாதத்தில் சுக்லாஷ்டமி செவ்வாய்கிழமையன்று திருவோண நட்சத்திரத்தில் அரங்கப் பெருமானின் ஐம்படைகளில் ஒன்றாகிய பாஞ்சசந்நியம் என்னும் திருச்சங்கின் அம்சமாக அவதரித்தார். அவர் பொய்கையில் அவதரித்த காரணத்தால் பொய்கையார் எனச் சிறப்பிக்கப்பட்டார்.


என் நெஞ்சம் அவனது அன்பையே எக்காலமும் எண்ணி எண்ணி மகிழச்சொல்கிறது. என் நாக்கு அவனது அழகிய திருமேனியை துளவ மாலை சூடிய மார்பை, செங்கமல கண்களை, சக்கராயுதம் தரித்த கையை, கழலணிந்த கால்களை, வெண்ணெய் ஒழுகும் செம்பவள உதடுகளை எந்நேரமும் புகழ்ந்து பாடிக்கொண்டேயிருக்க விழைகிறது என் கண்கள். பிறப்பறுக்கும் பெருமானை, உலகளந்த குறுமுனியை, மாயக்கள்ளனை, திருமகள் நாதனான கண்ணனைக் காண் என்று இயம்புகின்றன.

என் செவிகளோ அவன் தன் அருட்புகழ் பேசும் பாடல்களைக் கேட்க விரைகின்றன என்று எப்பொழுதும் சொல்லிக் கொண்டேயிருப்பார். தன்னை மறந்து பரமன் மேல் பாடி மகிழ்வார். அவன் அருங்குணங்களையும் அரிய செயல்களையும் புகழ்வார். நெடியோன் மாயனின் திருப்பெயர்களையெல்லாம் கூறிக்கூறிப் போற்றுவார். அப்போது அவர் கண்களிரண்டும் ஆனந்தக் கண்ணீரைச் சொரியும். அகம் கரைந்து உள் ஒடுங்கி திருமாலின் திவ்விய அழகில் தன்னையும் மறந்து போவார். பொய்கையார் பிறர் பொருளை விரும்ப மாட்டேன், கீழான தன்மையுள்ளவர்களுடன் நட்பு கொள்ள மாட்டேன், உயர்ந்தவரோடு சேர்ந்து வாழ்வேனே அல்லாமல் மற்றவர்களோடு சேரமாட்டேன்; திருமாலைத் தவிர வேறு தெய்வத்தைத் தெய்வம் என்று புகழமாட்டேன்; வணங்க மாட்டேன்; ஆதலால் நம்மை நாடி பிறப்பு இறப்புத் துன்பத்தைத் தரும் வினை இனி வரமுடியாது.

நயவேன் பிறர் பொருளை; நள்ளேன் கீழாரோடு உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்; வியவேன் திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்; வருமாறு எம் மேல் வினை? என்றெல்லாம் திருமாலை பாடிப் பரவுவார், மேலும் அவர்.

ஏற்றான் புள் ஊர்ந்தான், எயில் எரிந்தான்,
மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் கூற்று ஒருபால்
மங்கையான், பூமகளான் வார்சடையன், நீள்முடியான்
கங்கையான், நீள்கழலான் காப்பு

என்று பாடுவார்.

பயோடேட்டா

பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,
பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : திருமாலின் சங்கின் அம்சம்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று !

இவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார். வைணவத்தினர் இவரை கவிஞர் தலைவன் என் போற்றுகின்றனர். இவர்  காஞ்சி நகர் திருவெக்கா பொய்கையில் அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர் பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார். திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார். கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார். அத்துடன் தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார். மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தவர். சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார். தன்னையே மறந்து பகவானை பாடி மகிழ்வார்.

ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு      சேவை செய்தும் வாழ்ந்து வந்தார். இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார். ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்து சேர்ந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு, சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார். இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார்.  பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்)

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)

பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)

1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்  திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)

 
மேலும் 12 ஆழ்வார்கள் »
temple

பூதத்தாழ்வார் பிப்ரவரி 09,2011

பயோடேட்டா பிறந்த ஊர் : மகாபலிபுரம்பிறந்த நாள் :  7ம் நூற்றாண்டுநட்சத்திரம் : தெரியவில்லை, ... மேலும்
 
temple

பேயாழ்வார் பிப்ரவரி 09,2011

பயோடேட்டா பிறந்த ஊர் :  மயிலாப்பூர்பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டுநட்சத்திரம் : சதயம் (ஐப்பசி ... மேலும்
 
temple
பயோடேட்டா பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)பிறந்த நாள் : கி.பி.7ம் ... மேலும்
 
temple

பெரியாழ்வார் பிப்ரவரி 09,2011

பயோடேட்டா பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்தந்தை : முகுந்தர்தாய் : பதுமவல்லிபிறந்த ... மேலும்
 
temple

ஆண்டாள் பிப்ரவரி 09,2011

பயோடேட்டா பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்தந்தை : பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.