காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கன்னியம்மன் கோவிலில், கிருபானந்த வாரியார் சுவாமிகள் குரு பூஜை நேற்று நடந்தது.
காஞ்சிபுரத்தில் செயல்படும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் குரு பூஜை அன்னதான அறக்கட்டளை சார்பில், கிருபானந்த வாரியார் சுவாமிகள் மகா குருபூஜை விழா நேற்று காலை 9:00 மணிக்கு, திருவேகம்பன் தெருவில் உள்ள கன்னியம்மன் கோவிலில் நடந்தது.
இந்நிகழ்வில், கிருபானந்த வாரியார் சுவாமிகளின் உருவ சிலைக்கு, புஷ்பாஞ்சலி செலுத்தி பக்தர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் வழிபட்டனர். தொடர்ந்து, திருவாசகம் உள்ளிட்ட தெய்வத்திருமுறை இசை பாடப்பட்டது.
கச்சபேஸ்வரர் கோவிலின் திருப்பணியில் ஈடுபடுத்திக் கொண்ட நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிறுவன அறங்காவலர் சுந்தரமூர்த்தி, செப்பேடு எழுத்தர் ராஜேந்திரன், வோல்டெக் நிர்வாக இயக்குனர் உமாபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.