சிதம்பரம் சிவகாமசுந்தரி கோவிலில் ஐப்பசி பூர உற்சவ தேரோட்டம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2026 12:11
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமி அம்மன் கோவிலில் ஐப்பசி பூர உற்சவ தேரோட்டம் நேற்று நடந்தது.
இதற்கான விழா கடந்த 26ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனையை தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடந்தது. தொடர்ந்து மாலை யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, அம்மனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. இன்று, .4-ம் தேதி பட்டு வாங்கும் உற்சவமும், அம்மனுக்கு மகாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. நாளை 5-ம் தேதி இரவு சிவானந்த நாயகி சமேத சோமாஸ்கந்தர் திருக்கல்யான உற்சவம் நடைபெறுகிறது.