குஜராத் சோம்நாத் கோயில் அருகே அசைவ உணவு விற்பனைக்குத் தடை தொடரும்! குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2026 05:11
குஜராத்: குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அருகே அசைவ உணவுப் பொருட்கள் விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, குஜராத் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் வெள்ளிக்கிழமை (அக். 30) இடைக்காலத் தடை விதித்தது. கிர் சோம்நாத் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி நிஷா தாக்கோர், அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, குஜராத் அரசு அவசரமாக மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி மனாஷ் ரஞ்சன் பதக் மற்றும் நீதிபதி நிர்ஜார் தேசாய் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சோம்நாத் கோயில் அருகே அசைவ உணவு விற்பனைக்குத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அறிவிப்பு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
என்ன நடந்தது?
- மாவட்ட ஆட்சியர் சோம்நாத் கோயில் அருகே அசைவ உணவு விற்பனைக்குத் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டார்.
- அந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி தடையை ரத்து செய்தார்.
- குஜராத் அரசு மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, டிவிஷன் பெஞ்ச் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
- இதனால், கோயில் அருகே அசைவ உணவு விற்பனைக்கான தடை மீண்டும் அமலில் தொடர்கிறது.