மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2026 03:11
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மகா கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் மகா கந்தசஷ்டி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான கந்த சஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றறனர். வரும், 15ம் தேதி இரவு சூரசம்ஹார நிகழ்வு நடக்கிறது. வரும், 16ம் தேதி காலை 9:00 மணிக்கு, சிங்காரவேலர் ஏகதின லட்சார்ச்சனை தொடங்குகிறது. அன்று இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வரும், 15ம் தேதிவரை சொற்பொழிவு நடத்தப்படுகிறது. வரும் டிச.,1 காலை 8:30 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது.