கடலுார், புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கொடியேற்றப்பட்டது. இதனையொட்டி மூலவர் சிவசுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தினமும் காலை 7:00 மணிக்கு, இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 14ம் தேதி காலை 7:00 மணிக்கு வீதியுலா, பகல் 12:30 மணிக்கு வீரபாகு சிறை மீட்டல், தாரகன் வதம், இரவு 7:00 மணிக்கு சக்திவேல் பெறும் விழா நடக்கிறது. 15ம் தேதி காலை 7:00 மணிக்கு வீரபாகு தேவருக்கு சிறப்பு அபிேஷகம், 7:30 மணிக்கு சஷ்டி மகாபிேஷகம், இரவு 7:00 மணிக்கு வீரபாகு துாது சிங்கமுகன் வதம், 9:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 16ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 10:00 மணிக்கு கொடியிறக்கம், 17ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது.