தேனி: சுருளி அருவியில் சிவன் கோயில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி, சாமியார் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.சுருளிஅருவியில் சாமியாராக இருப்பவர் முருகன், 25. இவர் தேனி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், சுருளி அருவியில் கட்டப்பட்டு, 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவன் கோயில், பாழடைந்து இருந்தது. இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் இடித்து விட்டனர். தற்போது சிவலிங்கம் மட்டுமே உள்ளது. ஆர்ய அண்ணாமலையார் கோயில் என்ற இக்கோயிலை மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,என தெரிவித்துள்ளனர்.