Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு ... திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தசஷ்டி விழா: முருகன் கோவில்களில் நாளை சூரசம்ஹாரம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கந்தசஷ்டி விழா: முருகன் கோவில்களில் நாளை சூரசம்ஹாரம் விமரிசை

பதிவு செய்த நாள்

14 நவ
2026
10:11

திருப்பூர்: கந்தசஷ்டி விழா, 10-ம் தேதி முருகன் கோவில்களில் விமரிசையாக துவங்கியது.


வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், காப்பு அணிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்களும் காப்பு அணிந்து விரதம் துவங்கினர். நான்காம் நாளான நேற்று, கோவில்களில் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், உற்சவமூர்த்திகளுக்கு இளஞ்சிவப்பு நிற பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நாளை காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு அன்னை விசாலாட்சியிடம் சக்திவேல் பெறும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சக்திவேல் பெற்ற முருகப்பெருமான், வீரபாகு உடன் சென்று கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்து வெற்றிவாகை சூடுவதாக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். வரும் 16-ம் தேதி ஸ்ரீவள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது.இக்கோவிலில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா நாளை, 15ம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், பி.என்.ரோடு, மேட்டுப்பாளையம் அருகே உள்ள, வெங்கடேசபுரம் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்- ராகு பகவான் கும்ப ராசிகளில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar