அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2026 09:11
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு, இன்று இரவு மூன்றாம் பிரகாரத்தில் தங்க கொடிமரம் முன் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக காலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த அருணாச்சல ஆன்மீக சேவை சங்கம் சார்பில், சுவாமிக்கு 12 திருக்குடைகள் காணிக்கையாக கொடுக்கும் ஊர்வலத்தில் விநாயகர், சிவன் பார்வதி, முருகர் வேடமிட்டு நடனம் ஆடி அனைவரும் வெகுவாக கவர்ந்தனர்.