Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்: அரோகரா கோஷத்துடன் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்: அரோகரா கோஷத்துடன் பரவசம்

பதிவு செய்த நாள்

14 நவ
2026
05:11

திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதனைக்காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 


அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்காரம் நாளை மாலை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் 5 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக 325 நிரந்தர கழிப்பறைகளும் தற்காலிகமாக 300 கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 69 குளியலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நிரந்தர 384 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. தற்போது தற்காலிகமாக லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் கூடிய 149 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 23 இடங்களில் குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1000 லிட்டர்  கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. 300 மில்லி கொண்ட 6 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் நிரந்தர மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  6 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 


7 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது. கோயில் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் தடுப்பு வேலிகள் அமைத்து மரைன் போலீசார் மற்றும் கோவில் பக்தர் பாதுகாப்பு குழுவினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தீயணைப்புத் துறையினர் கோவில் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் தங்குவதற்கு 5 நிரந்தர கொட்டகைகள் உள்ளன. அதனுடன் 6 தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அதனை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  4100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவிலுக்கு நான்கு மினி பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மார்க்கமாக வரக்கூடிய பேருந்துகள் வாகனங்களுக்கு 12 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தம் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது அதில் பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதை தவிர கண்காணிப்பு அறையில் அனைத்து துறை அதிகாரிகள் மூன்று ஷிப்ட் முறையில் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகை: கந்த சஷ்டி திருவிழாவையொட்டி பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான இன்று காவடி மண்டபத்தில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரலீலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: கந்தசஷ்டி விழா, 10-ம் தேதி முருகன் கோவில்களில் விமரிசையாக துவங்கியது.வள்ளி, தெய்வானை சமேத ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் இன்று துவங்கியது.கேரள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar