Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

14 நவ
2026
01:11

நாகை: கந்த சஷ்டி திருவிழாவையொட்டி பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா" என, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.


முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையான ஸ்தலமாக, நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவில் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட சிக்கல் சிங்காரவேலவர் கோவிலின் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 13 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி சிங்காரவேலவர், வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து த.வெ.க., நாகை மாவட்ட செயலாளர் சுகுமார் தேரினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்க, பக்தர்கள் நான்கு மாட வீதிகள் வழியாக கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... என பக்தி பரவசத்துடன் தேரினை இழுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின் போது சிவ வாத்தியங்கள் முழங்க பரதநாட்டிய குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 


கந்தசஷ்டி விழாவையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் தன் தாயிடம் வேல் வாங்கியதும் திருமேனி எங்கும் வியர்வை பொழியும் அருட்காட்சி தரும் நிகழ்ச்சி இன்று இரவு சிக்கலில் நடைபெறுகிறது. இதில் கோவிலில் வீற்றிருக்கும் வேல் நெடுங்கண்ணி அன்னையிடம், முருகப்பெருமான் சக்தி வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரலீலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: கந்தசஷ்டி விழா, 10-ம் தேதி முருகன் கோவில்களில் விமரிசையாக துவங்கியது.வள்ளி, தெய்வானை சமேத ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் 6ம் நாளான நாளை (நவ.,15) சூரசம்ஹார ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது.இக்கோவிலில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா நாளை, 15ம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar