Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று கந்தசஷ்டி சூரசம்ஹாரம்; வெற்றியுடன் வரும் வேலவனை வழிபடுவோம் வினையேல்லாம் தீரும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று கந்தசஷ்டி சூரசம்ஹாரம்; வெற்றியுடன் வரும் வேலவனை வழிபடுவோம் வினையேல்லாம் தீரும்!

பதிவு செய்த நாள்

15 நவ
2026
09:11

அரக்கன் சூரபத்மனை, உலக நன்மைக்காக முருகப் பெருமான் அழித்த நன்னாள் தான், கந்த சஷ்டி திருவிழாவான சூரசம்ஹாரம். இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் நடைபெறும். முருகப்பெருமான், அசுரரான சூரபத்மனை வதம் செய்த திருவிளையாடலையே நாம், கந்தசஷ்டி விரத விழாவாக கொண்டாடுகிறோம்.


சூரபத்மன், ஒரு பாதி, நான் என்ற அகங்காரமும், மற்றொரு பாதி, எனது என்ற மமகாரமாகவும் அமையப் பெற்றவன். பிரம்ம தேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்களுள், தக்கன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, பல வரங்களைப் பெற்றிருந்தான். வரத்தின் வலிமையை பெற்றதால், சிவனை மதியாது யாகம் செய்து, சிவனால் தோற்றுவிக்க பெற்ற, வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான். காசிபனும் கடுந்தவம் புரிந்து, சிவனிடம் இருந்து மேலான சக்தியை பெற்றான். ஒருநாள், அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப் பெறுபவர்) ஏவப்பட்ட, மாயை எனும் அரக்கப் பெண் மீது, மையல் கொண்டு, தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத்தொடர்ந்து, காசிபனும், மாயை எனும் அசுரப் பெண்ணும் இணைந்து, மனிதத் தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானை முகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசுமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளை பெற்றனர். இவர்களுள் சூரபத்மன், சர்வ லோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளை பெற எண்ணி, சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று, சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு சக்தியாலும், அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாக, சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி, அண்ட சராசரங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.


சூரபத்மன், பதுமகோமளை எனும் பெண்ணை மணந்து, வீரமகேந்திரபுரியை ஆண்டு வரும் காலத்தில், பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், வச்சிரவாகு ஆகிய புதல்வர்களும், வேறு மனைவியர் மூலம், மூவாயிரம் பேரும் பிறந்தனர். சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு, இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து, அதர்ம வழியில் ஆட்சி செய்தான். அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள், சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களை காப்பாற்ற திருவுள்ளம் கொண்டு, சூரபத்மனை அழிக்க, சக்தி படைத்த ஆறுமுகனை அவதரிக்க செய்தார். ஆறுமுகம் கொண்ட முருக பகவானே, சூரபத்மனை அழித்து உலகில் உள்ள தேவர்களையும், மக்களையும் காத்த நாளையே நாம், சூரசம்ஹாரம் விழாவாக கொண்டாடுகிறோம். வீட்டில் இன்று முருகனை வழிபட தீவினைகளோ கர்ம வினைகளோ நம்மை அண்டாது. முருகனின் வெற்றிவேல் நம்மை காக்கும். கந்தன் நம்மைக் காக்க இருக்க, கவலை ஏன்.. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன்  கார்த்திகை தீபத் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில், கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலில் ... மேலும்
 
temple news
நாகை: கந்த சஷ்டி திருவிழாவையொட்டி பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான இன்று காவடி மண்டபத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar