Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெரூர் ஸ்ரீசதாசிவ பிரமேந்திரர் ... பழனி முருகன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம் பழனி முருகன் கோவிலில் 108 பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுகுமலையில் தாரகாசுரன் சம்ஹாரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கழுகுமலையில் தாரகாசுரன் சம்ஹாரம்

பதிவு செய்த நாள்

15 நவ
2026
02:11

துாத்துக்குடி: தென்பழனி என அழைக்கப்படும் கழுகுமலையில் நடந்த சம்ஹார நிகழ்ச்சியில், தாரகாசுரனை கழுகாசல மூர்த்தி வதம் செய்தார்.

துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் அமைந்துள்ள தென் பழனி என அழைக்கப்படும் கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 10 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

ஐந்தாம் நாளான நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு, கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை அம்பாள்களை எழுந்தருளச் செய்யும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார்.

இதையடுத்து, சூரர்களால் சிறைபிடிக்கப்பட்ட வீரபாகுவை மீட்பதற்காக, சுவாமி வீரவேல் ஏந்தி மயில் வாகனத்தில் போர்க்களத்தை அடைந்தார்.

அங்கு கோவில் சார்பில் நாரதர், முருகாற்றுப்படைப் பாடல்களைப் பாடியபடி சூரபத்மனிடம் மூன்று முறை துாது சென்றார். சமரசம் ஏற்படாததைத் தொடர்ந்து, தாரகாசுரனை கழுகாசலமூர்த்தி வதம் செய்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் “வெற்றி வேல்! வீர வேல்!” என பக்தி முழக்கமிட்டனர். முருகன் கோவில்களில் சஷ்டியின் 6 வது நாளில்தான் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம்.

முந்தைய நாளே தாரகாசுரன் வதம் செய்யும் நிகழ்ச்சி கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருத்தலத்தில் நடைபெறுவது தனிச்சிறப்பு ஆகும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரக்கன் சூரபத்மனை, உலக நன்மைக்காக முருகப் பெருமான் அழித்த நன்னாள் தான், கந்த சஷ்டி திருவிழாவான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன்  கார்த்திகை தீபத் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி, கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிங்க முகன் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி, மயிலாப்பூர், குன்றத்துார் உள்ளிட்ட முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்கள் துலா உற்சவம் திருவாவடுதுறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar