Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகம் முழுவதும் முருகன் ... மதுரையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்... சரண கோஷத்துடன் மாலை அணிந்து விரதம் துவங்கினர் மதுரையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்... ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் அருகே பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விழுப்புரம் அருகே பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

17 நவ
2026
12:11

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு ஏரிக்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்

ராகுல், முதுகலை இரண்டாமாண்டு மாணவர்கள் செந்தமிழ் செல்வன், செந்தமிழ்மாறன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்பாது, அங்குள்ள ஒரு வேப்பம் மரத்தடியில் மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் இருந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இதை குறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது;

இந்த கொற்றவை, பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மண்ணிற்கு மேற்பகுதியில் இரண்டரை அடி உயரம் காணப்படும் சிற்பமானது அழகிய முகத்துடன் எட்டு கரங்களுடன் உள்ளது.

தலையில் கரண்ட மகுடம், இரு காதுகளிலும் பத்ரகுண்டலம், மார்பில் மார்புகச்சை, இடையில் அரையாடை, புஜங்களில் வாகுவளையங்கள், மணிக்கட்டில் வளையல்கள், கொற்றவையின் எட்டு கரங்களில் வலது பக்க நான்கு கரங்களில் சங்கு, நீண்ட வாள், அம்பு, பாசக் கயிறு மற்றும் இடது பக்கம் நான்கு கரங்களில் சக்கரம், வில், கேடயம் மற்றும் கீழ்கரம் இடுப்பின் மேல் வைத்தவாறு கடியஸ்த நிலையில் உள்ளது. இச்சிற்பம் 1200 ஆண்டுகள் பழமையானது.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மாநாடு பிலிப்பைன்சிஸின் மணிலா நகரில் நடக்கிறது. ... மேலும்
 
temple news
மதுரை: கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, மதுரையில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
பல்லடம்: மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், உரிய திட்டமிடல் இன்றி நடத்தப்படும் விழாக்களால், ... மேலும்
 
temple news
குமரி: கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகள் இன்று துவங்குவதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar