முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2026 04:11
புதுச்சேரி: முத்துலிங்கப்பேட்டை, முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்காக ரூ.20 லட்சம் நிதியுதவியை அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., வழங்கினார். தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட முத்துலிங்கப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக திருப்பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் திருப்பணிக்காக ரூ.20 லட்சம் நிதியை, அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாகிகளிடம் வழங்கினார். இதில், என்.ஆர்.காங்., பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.