Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ... தேவிபட்டினம் பூமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தேவிபட்டினம் பூமாரி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டூரில் தருமபுரம் ஆதீன 8வது குருமகா சன்னிதானம் குருமூர்த்தம் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோட்டூரில் தருமபுரம் ஆதீன 8வது குருமகா சன்னிதானம் குருமூர்த்தம் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 நவ
2026
03:11

மயிலாடுதுறை: கோட்டூரில் தருமபுரம் ஆதீன 8வது குருமகா சன்னிதானம் குருமூர்த்தம் கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது


மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும் தமிழையும் தழைத்தோக செய்து வரும் தருமபுரம் ஆதீனத்தின் 8 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அழகிய சிற்றம்பல தேசிகர் சுவாமிகள் கி.பி. 1680 முதல் 1700 வரை 20 ஆண்டுகள் அருளாட்சி செய்து வந்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் அவதரித்து இறுதியாக அங்கேயே சமாதி அடைந்த 8 வது குருமகா சன்னிதானம் அம்பர் மாகாளம் சொர்க்கபுர ஆதீனத்தை தோற்றுவித்த  முதற்குறவருக்கு ஞானாசிரியராக திகழ்ந்தார். அவருக்கு கோட்டூர் சிவ கொழுந்தீஸ்வரர் கோவில் நந்தவனத்தில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் அருளானையின் படி குருமூர்த்த ஆலயம் அமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18ம் தேதி முதல் காலையாக சாலை பூஜைகள் தொடங்கி இன்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாவாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடங்கள்  புறப்பாடு செய்யப்பட்டு குருமூர்த்த ஆலயத்தின் விமானத்தை அடைந்தன. மங்கள வாத்தியங்கள் இசைக்கு, வேத மந்திரங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் குருமூர்த்த ஆலய விமான கலசத்தில் புனிதநீர் சேர்த்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் குருமூத்ததில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு குருமகா சன்னிதானம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து வைத்தார். இதில் தொண்டை மண்டல ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் ஸ்ரீமத் சபாபதி தம்பிரான், தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், திருவாரூர் அருள்குமரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து மாதேஸ்வர பூஜை நடைபெற்று  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கார்த்திகை தினத்தன்று (நவம்பர் 24) மட்டும், ஒருமுறை தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100-வது அவதார நூற்றாண்டு விழாவின் நிறைவையொட்டி, 10-வது அகில ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளை காலை உச்சவத்தில் 63 ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஆலங்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar