Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் பூமாரி அம்மன் கோயில் ... திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்: ஹிந்துக்களின் மனதில் தீப ஒளி காமாட்சிபுரி ஆதினம் கருத்து! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் திரளான யாத்ரீகர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் திரளான யாத்ரீகர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

20 நவ
2026
04:11

நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில், திரளான யாத்ரீகர்கள் பங்கேற்றனர்.


நாகையை அடுத்த நாகூரில், பிரசித்திப் பெற்ற ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது. இத்தர்கா கந்தூரி விழா கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக தர்கா சன்னதியில் தாபூத் எனும் சந்தனம் பூசும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நேற்று இரவு, நாகை, யாஹூசைன் பள்ளி தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது. ஜாதி, மத பாகுபாடின்றி வழியெங்கும் திரண்டிருந்த மும்மதத்தைச் சேர்ந்த திரளான மக்கள், சந்தனக்கூடு ரதத்தின் மீது பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர். ஜென்டை மேளம், தப்பாட்டம், நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, பேன்ட் வாத்தியங்கள் முழங்க, வண்ண விளக்குகளால் அலங்கரிகப்பட்ட 25 க்கும் மேற்பட்ட ரதங்கள், சந்தனக் கூட்டுடன் அணி வகுத்தன. இன்று அதிகாலை நாகூர் வந்தடைந்த சந்தனக்கூடு ரதத்தில், சந்தனக் குடங்கள் ஏற்றப்பட்டு, தர்காவின் 4 வீதிகள் வலம் வந்த பின், தர்கா ஆதினகர்த்தாக்கள் முன்னிலையில் சந்தனக் குடங்கள் தர்கா சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து பாதுஷா நாயகம் ஆண்டவர் சன்னதியில் சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட திரளான யாத்ரீகர்கள் கலந்துக் கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கார்த்திகை தினத்தன்று (நவம்பர் 24) மட்டும், ஒருமுறை தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100-வது அவதார நூற்றாண்டு விழாவின் நிறைவையொட்டி, 10-வது அகில ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளை காலை உச்சவத்தில் 63 ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஆலங்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar