Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயிலில் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் குவியும் பக்தர்கள்: மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் குவியும் பக்தர்கள்: மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

20 நவ
2026
10:11

சபரிமலை: சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் இன்று அதிகரித்தது. இருப்பினும் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களில் தினமும் 15,000 பேர் வரை வருவதில்லை என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.


சபரிமலையில் மண்டல கால பூஜை: அதிகாலை தொடங்கி நடந்து வருகிறது. தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 66 ஆயிரம் பேருக்கும், ஸ்பாட் புக்கிங் மூலம் 14 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 80,000 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இன்று ஐந்தாவது நாளில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகம் இருந்தது. சீசன் துவக்கத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஆயிரத்துக்கும் குறைவான பக்தர்கள் மலையேறிய நிலையில் இன்று இது 3555 ஆக அதிகரித்தது. மூன்று மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.


தினமும் 66,000 பேர் வரை முன்பதிவு செய்த நிலையில் 15 ஆயிரம் பேர் வரை வருவதில்லை. முன்பதிவு கிடைக்காதவர்கள் ஸ்பாட் புக்கிங் எடுப்பதற்காக நிலக்கல் வருகின்றனர். ஆனால் அங்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக வழங்கப்படாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் எதற்காக சபரிமலை வரவில்லை அல்லது இனிவரும் நாட்களில் இந்த கூப்பனை பயன்படுத்தி வருவார்களா என்ற ஆதங்கம் தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பக்தர்கள் தாங்கள் முன்பதிவு செய்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சபரிமலை சன்னிதானத்திற்கு வர வேண்டும் என தேவசம்போர்டு, கேரள காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளன.


கார்த்திகை முதல் தேதி நடை திறக்கப்பட்ட நாளில் 58 ஆயிரத்து 697 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களில் 40 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்திற்கு வந்தனர். மீதமுள்ள 19000 பேர் வரவில்லை. இவர்கள் வரும் நாட்களில் இந்த கூப்பணை கொண்டு வருவார்களா என்ற கேள்வியும் தேவசம் போர்டு அதிகாரிகளிடம் எழுந்துள்ளது. சபரிமலை சுற்றியுள்ள பகுதிகளில் எக்ஸ்சைஸ் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.19200 அபராதம் விதிக்கப்பட்டது. சபரிமலையில் இந்த ஆண்டு அரவணை விநியோகத்துக்கு தானியங்கி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் அரவணை பெற பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். எப்போதும் இங்கு கூட்டம் அதிகம் உள்ளது. அதுபோல அப்பம் அரவணைக்கு தானியங்கி இயந்திரம் மூலம் பணம் செலுத்தி ரசீது பெற்று கவுண்டர்களில் பிரசாதம் பெறுவதற்கும் கூட்டம் அதிகமாக உள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயிலில் கற்பூரம் ஏற்றுவதோ, ஆரத்தி எடுப்பதோ கூடாது. மீறினால் அபராதம் அல்லது 3 ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் தானியங்கி இயந்திரம் மூலம் அரவணை பிரசாதம் வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை ... மேலும்
 
temple news
மூணாறு: சத்திரம், புல்மேடு பாரம்பரிய காட்டு வழியில் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல துவங்கினர்.இடுக்கி ... மேலும்
 
temple news
சபரிமலை: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டது. அதிகாலை 3.00 மணிக்கு புதிய மேல் சாந்தி ... மேலும்
 
temple news
சென்னை: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்களை, தமிழக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar