சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயிலில் கற்பூரம் ஏற்றினால் சிறை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2026 10:11
சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயிலில் கற்பூரம் ஏற்றுவதோ, ஆரத்தி எடுப்பதோ கூடாது. மீறினால் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
ரயில் பெட்டிகளில் கற்பூரம் ஏற்றி வழிபடுவதற்கும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் தடை உள்ளது. சபரிமலை சீசன் துவங்கி உள்ள நிலையில், சிறப்பு ரயில்களில் பக்தர்கள் சிலர், விளக்கு மற்றும் கற்பூரம் ஏற்றி வழிபடுவதாக தெரியவந்துள்ளது. எளிதில் தீ பற்றக்கூடிய பட்டாசுகள், சமையல் எரிவாயு உருளை, அமிலம், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை ரயில்களில் எடுத்துச் செல்லக்கூடாது. ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்குகள் ஏற்றினால், சக பயணியர் உடனே டிக்கெட் பரிசோதகர், ரயில் பெட்டி உதவியாளர்கள், ரயில் நிலைய மேலாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்கலாம். 139 என்ற உதவி எண்ணிலும் தகவல் சொல்லலாம்.