Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கார்த்திகை தீப ... நத்தம் செல்வ விநாயகர் கோவிவில் வருடாபிஷேக விழா நத்தம் செல்வ விநாயகர் கோவிவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: சேவாதள மாநாட்டில் இந்திய –ஆப்பிரிக்க இசை சங்கமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பகவான் சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: சேவாதள மாநாட்டில் இந்திய –ஆப்பிரிக்க இசை சங்கமம்

பதிவு செய்த நாள்

21 நவ
2026
11:11

புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100-வது அவதார நூற்றாண்டு விழாவின் நிறைவையொட்டி, 10-வது அகில இந்திய ஸ்ரீ சத்ய சாய் சேவாதள மாநாடு நேற்று ஆந்திர மாநிலம் பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாள் விழா சுயநலமற்ற சேவை மற்றும் மனமாற்றத்தின் முக்கியத்துவம் குறித்த பகவானின் ஒலிப்பேருரையுடன் தொடங்கியது.


மாநாட்டில் தமிழ்நாடு தெற்கு மாநில ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் எஸ். கணபதி, தயை, அன்பு, நீதி ஆகிய நற்பண்புகளின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். இறைவன் மீதான அன்பு, தன்னடக்கம், பிரார்த்தனை ஆகியவை அறவாழ்வுக்கு அடிப்படை எனக் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவைக் குறிப்பிட்டு, S.A.I. – உயரிய அறிவு என்ற கருத்தையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, இந்தியா முழுவதும் சத்ய சாய் சேவா அமைப்புகள் மேற்கொண்ட சேவைகளை விளக்கும் சேவா தொகுப்பு மற்றும் பகவானின் உரைகள் அடங்கிய Being and Becoming ஆகிய இரண்டு நூல்கள் அவரது திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவாக, பிரபஞ்சத்தின் தாளம் என்ற ஆப்பிரிக்க - இந்திய தாள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல மிருதங்கக் கலைஞர் பத்ரி சதீஷ் குமார் தலைமையில் ஏழு கலைஞர்கள் ஜெம்பே, பகவாஜ், நகாரா, செண்டை, இடைக்கை உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். பல்வேறு நாடுகளின் இசை மரபுகள் சங்கமித்த இந்நிகழ்ச்சி, ஒற்றுமை, தூய்மை, தெய்வீகம் ஆகிய பகவான் வலியுறுத்திய கருத்துகளை இசை மூலம் எடுத்துரைத்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் தேரோட்டத்தில் முதலில் விநாயகர் ... மேலும்
 
temple news
திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு உற்சவம் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குஜராத் மாநிலம், வத்நகர் நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஹாடகேஸ்வர மகாதேவர் கோயில் வளாகத்தில், உலக மக்கள் ... மேலும்
 
temple news
சேவூர்: சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.அவிநாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar