Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவ நரசிம்மர் கோவிலில் கொடிமரம் ... அரியாங்குப்பம் ஐயப்பன் கோவிலில் பூஜை பக்தர்கள் பங்கேற்பு அரியாங்குப்பம் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோலாகலம்! தங்கத் தேரில் எழுந்தருளி பகவான் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோலாகலம்! தங்கத் தேரில் எழுந்தருளி பகவான் உலா

பதிவு செய்த நாள்

23 நவ
2026
01:11

பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் ஹில் வியூ மைதானத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கத் தேரில் எழுந்தருளி பகவான் பாபா உலா வந்து அருள்பாலித்தார்.


காலை 8 மணிக்கு ஒளி, ஒலி காட்சிகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, காலை 9.01 மணிக்கு பகவானின் தங்கத் தேர் ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.எஸ். நாகானந்த் வரவேற்புரையாற்றினார். அகில இந்திய சத்ய சாய் சேவா அமைப்புத் தலைவர் நிமிஷ் பாண்டியா சிறப்புரையாற்றினார். விழாவின் முக்கிய நிகழ்வாக, ஸ்ரீ சத்ய சாய் உலக அமைதி ஜோதி ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கேரள முதல்வர் வி.டி. சதீசன், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி ஆகியோர் உரையாற்றினர். காலை 10.22 மணிக்கு பகவானின் தெய்வீக அருளுரை நடைபெற்றது. தொடர்ந்து பஜனைகள் மற்றும் மங்கள ஆரத்தி நடைபெற்றன. 


மாலை 5 மணிக்கு வேத பாராயணம், 5.45 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 7 மணிக்கு வாணவேடிக்கை நடைபெறுகிறது. தொடர்ந்து கரிஷ்யே வசனம் தவ என்ற தலைப்பில் நூற்றாண்டு சிறப்பு இசைக்குழுவின் பக்திப் பாடல்கள் மற்றும் மங்கள ஆரத்தி நடைபெற உள்ளன. பகவானின் அன்பு, அமைதி, சேவை மற்றும் ஆன்மிகப் போதனைகளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகையில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை, திருக்கார்த்திகைத் தீபத்திருவிழாவை ஒட்டி, முருகப்பெருமானின் முதல்படை ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 
temple news
குஜராத் மாநிலம் அம்பாஜியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி – ஏககாவன் சக்தி பீட ஆலயத்தின் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar