Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகனின் நான்காம் படைவீடான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் நான்கு ரத வீதிகளை வலம் வந்த சிறிய வைரத்தேர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் நான்கு ரத வீதிகளை வலம் வந்த சிறிய வைரத்தேர்

பதிவு செய்த நாள்

24 நவ
2026
12:11

மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் உச்சநிகழ்ச்சியான மலைமேல் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமி தெய்வானை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினர்.


தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக பூஜை செய்தனர். பின்னர் கோவில் ஸ்தானிகப்பட்டர் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை கையில் ஏந்தி புனித நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கிரீடம் சுப்பிரமணிய சுவாமிக்கு சூட்டப்பட்டு கையில் செங்கோல் ஏந்தி பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க மேள தாளங்கள் முழங்க பட்டாபிஷேக நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


கார்த்திகை திருநாளான இன்று காலை 8 மணிக்கு சிறிய வைரத்தேர் 16 கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து சன்னதியை அடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் புகழ்பெற்றது. தந்தையாகிய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, 500 கிலோ பூக்களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar