Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பந்தலூர் முருகன் கோவிலில் 1008 விளக்கு ... தாடகை நாச்சியம்மன் கோவிலில் மகாதீபம்: பக்தர்கள் மலையேறி வழிபாடு தாடகை நாச்சியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா: சொக்கப்பனை ஏற்றி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழக கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா: சொக்கப்பனை ஏற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

25 நவ
2026
12:11

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கோயில்களில் சொக்கப்பனை தீபம் , வீடுகளில் தீபம் ஏற்றியும்சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பராசக்தி மாரியம்மன் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில், ராமர் கோயில்களில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு இரவு 7:00 மணிக்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. வால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இரவு 10:00 மணிக்கும், வெயிலுகந்தம்மன் கோயிலில் இரவு 9:30 மணிக்கும் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

* ராஜபாளையத்தில் திருக் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சிவானந்த ஆசிரமத்தில் வழிபாட்டை தொடர்ந்து சிறப்பு அன்னதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் அய்யனார் கோயிலில் முடி காணிக்கை, பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ராஜபாளையம் மாயூரநாதசுவாமி, சொக்கர் கோயில், தேவதானம் முருகன் கோயில், புத்துார் மலை கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வழிபாடு நடந்து.

சஞ்சீவி மலை கிரிவலத்திற்காக பரியாவரன், சாயி கிரீன்ஸ், பெண்கள் வாக்கத்தான், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் மலைமுந்தல் கோயில் தொடங்கி, சத்தியமூர்த்தி சுவாமிகள் ஆசிரமம், தொட்டியபட்டி பனை மரத்து முனீஸ்வரர் கோயில் வழியே திரளானோர் மலை உச்சியை அடைந்தனர். கார்த்திகையை முன்னிட்டு சஞ்சீவி மலையில் ஒவ்வொரு படியிலும், தேங்காய் வைத்து, தீபம் ஏற்றி படி பூஜையும் முருகன் கோயில் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

* ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று மாலை 6:00 மணிக்குமேல் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் முன்பு சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது.

* ஆண்டாள் கோயிலில் நேற்று இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள் எழுந்தருளல் நடந்தது. பின்னர் வடபத்ரசயனர் கோயில் ராஜகோபுரம் எதிரிலும், ஆண்டாள் சன்னதி அரங்கநாத பெருமாள் கோயில் தெருவிலும் சொக்கப்பனை ஏற்றுதல் நடந்தது.

* மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

* பழனி ஆண்டவர், பெரிய மாரியம்மன், நத்தம் பட்டி வழி விடு முருகன், வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயில்களில் திருக்கார்த்திகை வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழுப்பும்

கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள அருளாம்பிகை சமேத பசுபதீஸ்வரர் கோவிலில் மாலை 6:00 மணிக்கு அகல் விளக்கேற்றியும், கோபுரத்தின் மீது தீபம் ஏற்றியும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, கோவில் முன்பு சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வும் நடந்தது.

ஆதிவாலீஸ்வரர் கோவில், மகாராஜபுரம் சுந்தரேஸ்வரர் கோவில், பூந்தோட்டம் வாலீஸ்வரர் கோவில்களில் திருப்பணிகள் நடந்ததால், கோவிலில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.

ராமேஸ்வரம்


ராமநாத சுவாமி கோயில் ரதவீதியில் சொக்கப்பனைக்கு தீ மூட்டி பக்தர்கள் கார்த்திகை தீப விழா கொண்டாடினர். நேற்று கார்த்திகை தீப விழாவையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதி எதிரே கிழக்கு ரதவீதி சாலையில் கோயில் நிர்வாகம் இரு சொக்கப்பனைகள் அமைத்தது. இதனை தொடர்ந்து சுவாமி, அம்மன் கோயில் பிரகாரத்தில் வலம் வந்து கிழக்கு ரதவீதியில் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதணை நடத்தியதும், அங்கிருந்த இரு சொக்கப்பனைக்கு அடுத்தடுத்து தீ மூட்டினர். சொக்கப்பனையில் தீ மளமளவென எரிந்ததும், அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கார்த்திகை தீப விழாவை கொண்டாடினர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் காலை, மாலை நேர பூஜைகளில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதான ஏற்பாடுகளை தஞ்சி பைனான்ஸ் உரிமையாளர் தஞ்சி சுரேஷ் செய்திருந்தார். இதே போல் வடக்குத் தெரு பாலசுப்பிரமணியம் சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், குமரய்யா கோயில், வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணியம் சுவாமி, பாலதண்டயுதபாணி சுவாமி கோயில், பெருவயல் ரெணபலி முருகன் கோயில், பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலகம் அருகே வினைதீர்க்கும் வேலவர், நீச்சல்குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அபிேஷகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தி சொற்பொழி, கோயில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் விளக்குகளை ஏற்றினர். இரவில் பனை ஓலையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பாகூர்

பாகூர் வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை தீப உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, காலை 7:00 மணிக்கு, மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுப்ரமணியர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, இரவு 7:00 மணிக்கு கோவில் கோபுரத்தின் மீது மகா தீபம் ஏற்றி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7:30 மணிக்கு கோவிலின் முன் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதில், ஜோதி சொரூபமாக எழுந்தருளி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சந்திரசேகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி உள் புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

வடவள்ளி

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவமூர்த்தியான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 6:00 மணிக்கு, ஆதி மூலஸ்தானத்தில் தீபம் ஏற்றி வழிபாடு துவங்கப்பட்டது. தொடர்ந்து, பஞ்சமுக விநாயகர், பட்டீஸ்வரர், மரகதாம்பிகை அம்பாள், வரதராஜ பெருமாள் சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டது. மாலை, 6:50 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள தீப கம்பத்தில், மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

திருப்போரூர்

கந்தசுவாமி கோவிலில், கார்த்திகை தினத்தையொட்டி, கோவில் நடை அதிகாலை 5:00 மணிக்கு, திறக்கப்பட்டது. பக்தர்கள், சரவண பொய்கையில் நீராடி மொட்டை அடித்தல், காவடி எடுத்தல், எடைக்கு எடை துலாபாரம் எடுத்தல் என தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இரவு 7:00 மணியளவில் கோவிலின் முன்புறத்தில் அகல் விளக்குகளை ஏற்றி, சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, வள்ளி – தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தபெருமான் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* மேட்டுத்தண்டலம் அய்யப்பன் கோவில் வளாகத்தில் உள்ள சவுந்தர்ய நாயகி சமேத விஹித பரமேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப பெருவிழா நடந்தது. இதில், மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து மஹா தீபம் ஏற்றப்பட்டது.

* பிரணவ மலை கைலாசநாதர் கோவில், வெண்பேடு ஆஞ்சநேயர் கோவில், காட்டூர் தையல் நாயகி சமேத உத்ரவைத்ய லிங்கேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் கார்த்திகை தீப விழா விமரிசையாக நடந்தது.

* பிரான்மலை அடிவாரக்கோயிலில் ஐந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டு மயில்வாகனத்தில் சுப்பிரமணியர் வீதி உலா வந்தார். முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி லட்சதீபம் ஏற்றப்பட்டது. அலங்காரத்தில் சுவாமி அம்பாள் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவபுரிபட்டி சுயபிரகாச ஈஸ்வரர், சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாதர் கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சேவுகப்பெருமாள் ஐயனார் உள்ளிட்ட கோயில்களில் செக்கப்பனை கொளுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சிவகங்கை


சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. கோயில் முன் கோயில் அர்ச்சகர் பாண்டி சொக்கப்பனை ஏற்றி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கார்த்திகை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சிவகங்கை காசி விஸ்வநாதர், முருகன், சுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்தனர். சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவானுார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பெண்கள் பாலபிேஷகம் செய்து வழிபட்டனர். அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.


திருப்புத்துார்

திருப்புத்துார் ஆதித்திருத்தளிநாதர் கோயில், திருத்தளிநாதர் கோயில்களில் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றி பக்தர்கள் தரிசித்தனர்.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆதி திருத்தளிநாதர் கோயிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு மூலவர் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்து தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சொக்கப்பனை ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். திருத்தளிநாதர் கோயிலில் நேற்று காலை 10:30 மணிக்கு சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேக,ஆராதனை நடந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து மூலவர் சிவகாமி அம்பாளுக்கு பெளர்ணமி அபிஷேகம் நடந்து தீபாராதனையை தொடர்ந்து அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 7:00 மணி அளவில் மூலவர், அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூஜை நடந்து கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து முதல் பிரகாரத்தில் சொக்கப்பனை ஏற்றி பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் உற்ஸவர் சந்திரசேகர சுவாமி-,அம்பாள் திருவீதி வலம் வந்தனர்.

காஞ்சிபுரம்

வரதராஜ பெருமாள் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

திருக்கோவிலுார்


திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச ஆவாஹணம், பஞ்சாசன பூஜை, மூலவருக்கு மகா அபிஷேக, அலங்காரம், பூஜையைத் தொடர்ந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. இரவு 7:00 மணிக்கு ஆனந்த வள்ளி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின், கோவில் வளாகத்தில் எழுந்தருளி பனை ஓலையால் கட்டப்பட்ட சொக்கப்பனைக்கு ஏற்றப்பட்டு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அதனையொட்டி மூலவர் பெருமாள், உற்சவர் யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீஅம்புஜவல்லித்தயாருக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடந்தது. தொடர்ந்து உற்சவர் யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் ராஜகோபுரம் முன் சொக்கப்பனை ஏற்ற்ப்பட்டது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம்

கார்த்திகை தீபத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனைகள் ஏற்றப்பட்டது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பெரியநாயகர் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுக்கு கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை கோவில் வளாகத்தில் உள்ள அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபம் ஏற்றும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, நடராஜர் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, தேரடியில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியதும், ஐந்து சொக்கப்பனைகள் ஏற்றப்பட்டன.

உடுமலை

உடுமலை பகுதியிலுள்ள கோவில்களில், திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, முருகன் கோவில்கள், சிவாலயங்கள், அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகளும், மாலை ஜோதி ஏற்றும் நிகழ்ச்சிகளும் நடந்தன. வளாகங்களில் அகல் விளக்கு ஏற்றி, தீப ஒளி மயமாக காணப்பட்டது.

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு, பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் மகா அபிஷேகம் நடந்தது. மாலை, கோவில் வளாகத்திலுள்ள, தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதே போல், உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மாலை தீபக்கம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பனை, தென்னை ஓலைகள், மூங்கில், வாழை மற்றும் சோளத்தட்டுகளை கட்டி வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாரியம்மன் கோவிலில், பவுர்ணமி, திருக்கார்த்திகையை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. மாலையில், அகல் விளக்கு ஏற்றியும், கோவில் வளாகத்தில் உள்ள தீப கம்பத்தில், கார்த்திகை ஜோதி ஏற்றப்பட்டது.

மடத்துக்குளம், பாப்பான் குளத்தில் உள்ள ஞான தண்டாயுதபாணி கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை உற்சவருக்கு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து, மகா தீப ஜோதி ஏற்றப்பட்டது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா வந்து இதே போல், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலுள்ள கோவில்களில், திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. மாலை ஜோதி ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதே போல், பொதுமக்கள், வீடுகள், வணிக நிறுவனங்களில், அகல்விளக்கு ஏற்றி, வழிபாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தேவ் தீபாவளி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் முதன் முதலாக ... மேலும்
 
temple news
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் திருக்கார்த்திகை தீப உற்சவம் நிறை பௌர்ணமி நாளில் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
கோவை: கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று திருமங்கையாழ்வார் சாற்றுமறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar