எல்லை கருப்பராயன் கோயிலில் லட்சத்து 8 கார்த்திகை விளக்குகள்: பக்தர்கள் பரவசம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2026 05:11
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையத்தில் எல்லை கருப்பராயன் கோயிலில் லட்சத்து எட்டு திருவிளக்குகளுடன் திருகார்த்திகை தீப திருவிழா நடந்தது.
பாரத தேசம், பாரத மக்கள் நலன் பெற, 1008 குடும்பங்கள் பங்கு பெற்ற லட்சத்து எட்டு திருவிளக்கு ஏற்றி வழிபடும் திருக்கார்த்திகை விழா இங்குள்ள கோயில் அருகே உள்ள மைதானத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு, தர்மபுரி, பொள்ளாச்சி, நாமக்கல், நீலகிரி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவலிங்கம் வடிவில் தீபங்களை பக்தர்கள் வைத்து வழிபட்டனர்.