Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமையான பாரம்பரியம், பண்பாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பதிவு செய்த நாள்

27 நவ
2026
03:11

புதுடில்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நவ 24ல் ஏற்றப்படாத நிலையில் நாளை உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்தில் இருந்து தீபத்தை எடுத்து சென்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தவிட்டுள்ளது. 


திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் தமிழக தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள், இடையீட்டு மனுக்கள் நீதிபதிகள் அரவிந்த் குமார், பாஞ்சோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றத்தின் தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு நவ.,20ம் தேதி பிறப்பித்த உத்தரவை பின்பற்றாதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்; மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை மூடி மறைக்கும் நிகழ்வாகும். புதிய இடத்தில் தீபம் ஏற்ற தேவஸ்தானம் ஒத்துழைக்கவில்லை என்று கலெக்டர் குற்றம்சாட்டுகிறார். ஆனால், தீபம் ஏற்றாததற்கும், தேவஸ்தான அதிகாரிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அறங்காவலர் குழுவில் 5 பேர் உள்ளனர். ஹிந்து அல்லாதவரும் அதில் உள்ளார்.


தீபம் ஏற்றுவதற்கு எதிராக போராடியவரும் அறங்காவலர் குழுவில் உள்ளார். அறங்காவலர் குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அரசியல் காரணத்தினால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை. கிரிமினல் அவமதிப்பு, சிவில் அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


கார்த்திகை திருநாள் 11 நாட்கள் நடக்கும் என்பதால், தீபத்தூணில் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட வேண்டும், இவ்வாறு வலியுறுத்தப்பட்டது. மத்திய தொல்லியல் துறையின் வாதம்; தீபத்தூணில் ஆய்வு செய்ய போலீசார் அனுமதிக்கவில்லை. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத குழு அமைக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக போலீசார் இனி இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது. நாளை கூட தீபம் ஏற்ற இன்றே உத்தரவு பிறப்பிக்க வேண்டும், இவ்வாறு வாதிடப்பட்டது.


முதலைக்கண்ணீரா?


திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல் செய்ய போலீசார் 5790 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியிருந்தோம். மிக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று போலீஸ் கமிஷனர் தரப்பில் வாதிடப்பட்டது.


இதைக்கேட்ட நீதிபதி அரவிந்த் குமார், இவை எல்லாம் உண்மையான கண்ணீரா, இல்லை முதலைக்கண்ணீரா என்று நாங்கள் பார்க்கிறோம் என்று காட்டமாக தெரிவித்தார்.


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பாஞ்சோலி ஆகியோர் இந்த வழக்கில் தமிழக தலைமை செயலாளர் ஆஜராக வேண்டும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். கோவில் அறங்காவலர் குழுவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


நீதிபதிகள் தங்கள் உத்தரவில் மேலும் கூறி உள்ளதாவது;  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கடுமையான மனவருத்தம் ஏற்பட்டு உள்ளது. அமைதியாக இருக்க மாட்டோம்.  நீதிமன்ற உத்தரவுகளை மென்மையாக கையாளுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற தருணங்கள் இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய தருணம் வந்துவிட்டது. கார்த்திகை மாதம் முடிவதற்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் கோரி உள்ளனர். எவ்வித அனுதாபமின்றி உரிய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பது அரசமைப்பை சீர்குலைக்கும் முயற்சி எந்த அதிகாரத்திற்கும் உச்ச நீதிமன்றம் அடிபணியாது.  நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே மீறிவிட்டு பின்னர் மாநில அரசு அளித்துள்ள அறிக்கை மனசாட்சியை உலுக்குகிறது. மாநில அரசை கட்டுப்படுத்தக்கூடியது நீதிமன்றம். மதுரை மாவட்டத்தில் நிர்வாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.  உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாது மிகுந்த மனவருத்தத்தை தருகிறது. மதுரை மாவட்ட கலெக்டரின் அறிக்கையை நிராகரிக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரம் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபை சார்பில் மூன்றாம் ஆண்டு வேத ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்து சமுதாயத்தின் அடையாளமாக விளங்கும் பழமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாசார ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: ‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றத்தயார். ... மேலும்
 
temple news
சேலம் மாவட்டம், ஆறகழூர் திருக்காமநாதீஸ்வரர் கோவிலில், மகதை நாட்டு இளவரசர், இளவரசியின் சிற்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar