விவசாயம் செழிக்க வேண்டி பனை ஓலைகளை எரித்து வினோத வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2026 10:11
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டியில் விவசாயம் செழிக்க வேண்டி பனை ஓலைகளை எரித்து அதன் சாம்பலை வயலில் துாவி கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நெல், பருத்தி, சோளம், மிளகாய், உளுந்து உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு தொடர்ந்து மூன்று நாட்கள் கார்த்திகை விழா நடக்கிறது. இதில் பனை ஓலைகளை ஊர்வலமாக கொண்டு வந்த கிராம மக்கள், பிள்ளையார் கோயில் அருகே அவற்றுக்கு தீவைத்து எரித்தனர். தொடர்ந்து அதன் சாம்பலை விளை நிலங்களில் துாவி வழிபாடு நடத்தினர். இதனால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை.