Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரு குடிமகனின் பிரார்த்தனை: ... திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு விழா துவக்கம் திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உஜ்ஜயினியில் சிருங்கேரி ஸ்ரீமட கிளை திறப்பு: ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி விஜய யாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உஜ்ஜயினியில் சிருங்கேரி ஸ்ரீமட கிளை திறப்பு: ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி விஜய யாத்திரை

பதிவு செய்த நாள்

28 நவ
2026
12:11

பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான மஹாகாலேஷ்வர் கோவில் அமைந்துள்ள உஜ்ஜயினில், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் புதிய கிளை திறப்பு விழா மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ ஆதிசங்கரர் கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


ம.பி. மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி, அவந்திகா என்று அழைக்கப்படும் புண்ணியத் தலம். ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது. இந்நகருக்கு, கடந்த, 25 முதல் 28-ம் தேதி வரை விஜயம் மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, ம.பி. அரசு வழங்கிய இடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீமடத்தின் கிளையை திறந்து வைத்தார். தொடர்ந்து, புதிய வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சாரதாம்பாள் மற்றும் ஸ்ரீ ஆதிசங்கரர் கோவில்களின் கும்பாபிஷேகத்தையும் ஜகத்குரு நடத்தி வைத்தார். விழாவில், ம.பி. முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்று ஜகத்குருவிடம் ஆசி பெற்றார்.


ஆன்மிக தொடர்பு: சிருங்கேரியில் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கராசாரியாரால் நிறுவப்பட்ட தட்சிணாம்னாய ஸ்ரீ சாரதா பீடத்தின் தற்போதைய பீடாதிபதியாக உள்ள ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமி, 1966-ல் பிரம்மச்சாரியாக இருந்த காலத்தில், பகவான் ஸ்ரீ மஹாகாளேஷ்வரரின் தெய்வீகச் சாந்நித்யம் நிறைந்த உஜ்ஜயினி திருத்தலத்தில், தனது குருவும், 35-வது பீடாதிபதியுமான ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளை முதன்முதலில் தரிசனம் செய்தார். அதன்பின், அவரிடம் தொடர்ந்து சாஸ்திரக் கல்விகளைக் கற்று, 1974-ல் சந்நியாசம் பெற்றார். இவ்வாறு உஜ்ஜயினிக்கும் சிருங்கேரி ஸ்ரீமடத்துக்கும் நீண்டகால ஆன்மிகத் தொடர்பு இருந்து வருகிறது.


விஜய யாத்திரை: சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, 19-ம் தேதி முதல் கர்நாடகம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் விஜய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். மற்றொரு ஜோதிர்லிங்க தலமான ஓம்காரேஷ்வரில் டிச. 1- முதல் 4-ம் தேதி வரை தங்கி சிறப்பு பூஜைகளை நடத்துகிறார். தொடர்ந்து, ஒரு மாத கால விஜய யாத்திரையை நிறைவு செய்து டிச. 23-ம் தேதி சிருங்கேரி திரும்புவார் என ஸ்ரீமட நிர்வாகம் தெரிவித்துள்ளது. – நமது நிருபர் –

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இடையீட்டு மனு மீதான விசாரணையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar