திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீஐயப்பன் கோவிலில், 67வது ஆண்டு மண்டல பூஜை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடந்த, 17ம் தேதி முதல், தினமும் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனையும், மாலையில் கோவில் கலையரங்கத்தில் சிறப்பு பக்தி இன்னிசை, சொற்பொழிவு, நடனம் ஆகியனவும் நடந்து வருகிறது. விழாவில், ஆறாட்டு உற்சவம் துவக்கமாக நேற்று காலை மஹா கணபதி ேஹாமம் நடந்தது. மாலை, சபரிமலை தலைமைஅர்ச்சகர், ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி தலைமையில் கொடியேற்று உற்சவம் நடந்தது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு மகா கணபதி ேஹாமம், 10:00 மணிக்கு நவகலச அபிேஷகம், 108 வலம்புரி சங்காபிேஷகம், மாலை 7:00 மணிக்கு பறையெடுப்பும் நடக்கிறது. வரும், 2ம் தேதி, மஹா கணபதி ேஹாமத்தை தொடர்ந்து, ஐயப்பன் பவானி ஆறாட்டுக்கு புறப்பாடு நடக்கிறது. பவானியில் ஸ்ரீகண்டரு மோகனரு தலைமையில் அய்யப்பனுக்கு ஆறாட்டு நடக்கிறது. அன்று மாலை அய்யப்பன் ரத ஊர்வலம் ஈஸ்வரன் கோவிலில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட் – ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜனசங்க தலைவர் நாச்சிமுத்து தலைமையில், துணை தலைவர் மோகன்ராஜ், பொது செயலாளர் மணி, இணை யெலாளர் சிவகுமார், பொருளாளர் முருகேசன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.